லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.
லண்டன்,
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 10 தினங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து வரும் 9 ஆம் தேதி 6-ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கு மத்தியில் வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கும் விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு சர்வதேச அளவிலும் ஆதரவுக்குரல் எழுந்துள்ளது. அந்த வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான கோஷமும் எழுப்பப்பட்டது. போராட்டத்தையடுத்து லண்டன் போலீசார் குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story