அரபிக்கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானி உடல் மீட்பு


அரபிக்கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானி உடல் மீட்பு
x
தினத்தந்தி 7 Dec 2020 6:18 PM IST (Updated: 7 Dec 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

விமானம் விபத்துக்கு உள்ளாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில், விமானி உடல் மீட்கப்பட்டுள்ளது.

பனாஜி, 

இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் தேதி புறப்பட்ட மிக்29 கே போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால், நிஷாந்த் சிங் என்ற விமானி காணவில்லை. இதையடுத்து, மாயமான விமானி நிஷாந்த் சிங்கை தேடும்பணியில் கடற்படை, விமானப்படை ஈடுபடுத்தப்பட்டனர். கோவா கடற்பகுதியில் இந்த தேடுதல் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடுமையான தேடுதலுக்கு பின் கோவா கடற்பரப்பில் விமானி நிஷாந்த் சிங் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  கோவா கடற்கரையிலிருந்து 30 மைல் தொலைவில் நடத்தப்பட்ட விரிவான தேடலுக்கு பிறகு விமானி நிஷாந்த் சிங்கின் உடல்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Next Story