சில வருடங்களில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் - நிதி ஆயோக் துணைத் தலைவர்
சில வருடங்களில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் குமார் கூறி உள்ளார்.
புதுடெல்லி
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஐம்பது வருடங்களை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் குமார் கூறியதாவது:-
உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறுவதற்கு பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
விவசாயம், நவீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், புதிய கல்விக்கொள்கை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகளை, அனைத்து துறைகளிலும் புகுத்தி வருவதன் மூலமும், கொரோனா பாதிப்புகளில் இருந்து விரைந்து மீண்டு வருவதன் காரணமாகவும், அடுத்த சில வருடங்களில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு க்கு முந்தைய நிலைகளை எட்டும் என்று ராஜீவ் குமார் கூறினார்.
Related Tags :
Next Story