நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
நாளை 6-வது கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு - விவசாயிகள் இடையே நடைபெற உள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே தங்களின் ஒரே கோரிக்கை என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related Tags :
Next Story