பாரத் பயோடெக் நிறுவனத்தில் இன்று 64 நாடுகளின் தூதுவர்கள் ஆய்வு


பாரத் பயோடெக் நிறுவனத்தில் இன்று 64 நாடுகளின் தூதுவர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2020 12:39 PM IST (Updated: 9 Dec 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

பார்த் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருத்து குறித்த் ஆய்வு செய்ய 64 நாடுகளின் தூதுவர்கள் குழு ஐதராபாத் வந்துள்ளனர்.

ஐதராபாத்,

ஐதராபாத் நகரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து, மருந்து தயாரிப்புக்கான திட்டங்கள் மற்றும் மருந்து செலுத்துவது தொடர்பாக அந்நிறுவனம் செய்துள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 64 நாடுகளின் தூதுவர்கள் குழு இன்று நேரில் ஆய்வு செய்கின்றனர்.

இதற்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், ஈரான், பூடான், பிரேசில், மியான்மர், தென் கொரியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, ஸ்லோவேனியா உள்ளிட்ட 64 நாடுகளின் தூதுவர்கள் குழு இன்று விமானம் டெல்லிக்கு வந்திறங்கினர். அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்ற அவர்கள், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Next Story