சென்ட்ரல் விஸ்டா திட்டம்: பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதல்வர் பாராட்டு


தெலுங்கானா முதல் மந்திரி  சந்திரசேகர் ராவ் (Photo | PTI)
x
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் (Photo | PTI)
தினத்தந்தி 9 Dec 2020 3:52 PM IST (Updated: 9 Dec 2020 3:52 PM IST)
t-max-icont-min-icon

சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை டெல்லியில்  கட்டப்படவுள்ளன. ரூ.861.9 கோடி செலவில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது. 

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுகிறார். 

புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்து தெலுங்கானா முதல் மந்திரியும் தெலுங்கானா  ராஷ்டிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், பிரதமருக்கு கடிதம்  எழுதியுள்ளார்.

சந்திரசேகர் ராவ் எழுதிய கடிதத்தில், "தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவின் காலனித்துவ காலத்துடன் தொடர்புடையது என்பதால் டெல்லியில் அமைய உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுயமரியாதையின் அடையாளமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

Next Story