கர்நாடக சட்டப் பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்


கர்நாடக சட்டப் பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2020 8:17 PM IST (Updated: 9 Dec 2020 8:17 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கா்நாடகத்தில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே  பசுவதை தடுப்பு மசோதா இன்று மாநில சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை  கால்நடைத்துறை மந்திரி  பிரபு சவுஹான் பேரவையில்  தாக்கல் செய்தார். 

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மந்திரி ஜேசி மதுசாமி, “கர்நாடகாவில் பசுவதை அனுமதிக்கப்படாது. 

பசுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தல், வேறு இடங்களுக்கு இடம் பெயரச்செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவேளை பசுக்களுக்க்கு நோய் ஏற்பட்டு அதன் மூலம் பிற பசுக்களுக்கும் பரவும் வாய்ப்பு இருந்தால் அப்போது பசுவதைக்கு அனுமதி உண்டு” என்றார். 


Next Story