பெங்களூருவில் விவசாயிகள் ஊர்வலம்: சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் விவசாயிகளின் இந்த ஊர்வலத்தால், மெஜஸ்டிக் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு,
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சட்டசபை கட்டிடமான விதான சவுதாவை நோக்கி நேற்று பெங்களூருவில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
விவசாயிகளின் இந்த ஊர்வலத்தால், மெஜஸ்டிக் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.
Related Tags :
Next Story