முன்பதிவு செய்யாத அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் - தேவஸ்தான தலைவர் வேண்டுகோள்
முன்பதிவு செய்யாத அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தான தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலை,
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், ஆன்லைனில் ஏற்கனவே முன் பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story