சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மை இல்லை - சிபிஎஸ்இ விளக்கம்
சமூக வலைத்தளங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவலில் உண்மையில்லை என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. காலாண்டு தேர்வு நடைபெறாத நிலையில், அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக தகவல்கள் வேகமாக பரவி வந்தன. ஆனால் அந்த தகவல்களில் உண்மை இல்லை. அது போலியான தகவல் என சிபிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளின் அட்டவணை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்தவுடன் விரைவில் தேர்வு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story