சிறு, குறு நிறுவனங்களிடம் செய்த கொள்முதலுக்கு ரூ.21 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலுத்தியது


சிறு, குறு நிறுவனங்களிடம் செய்த கொள்முதலுக்கு ரூ.21 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலுத்தியது
x
தினத்தந்தி 11 Dec 2020 2:56 AM IST (Updated: 11 Dec 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக ‘தற்சார்பு இந்தியா’ என்கிற திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. பிரதமரின் லட்சியத்திட்டமான இந்த திட்டத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கொள்முதலுக்கான தொகையை 45 நாட்களில் வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், நிலுவைத்தொகைகளையும் விரைந்து செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்காரணமாக கடந்த 7 மாதங்களில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் முகமைகள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.5,100 கோடி மதிப்புக்கு கொள்முதல் செய்யப்பட்டு, அதில் ரூ.4,100 கோடி பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான ஆய்வை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மேற்கொண்டார். அப்போது, தொழில் நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்காக, அதிகாரிகளை அவர் பாராட்டினார்.

Next Story