கேரள உள்ளாட்சி தேர்தல்: 76 சதவீதம் வாக்குப்பதிவு
கேரளாவில் நேற்று நடந்த 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76 சதவீதம் வாக்குகள் பதிவானது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக நடந்து வருகிறது. கடந்த 8-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில், 2-வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. வயநாடு, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 மாநகராட்சிகள், 36 நகராட்சிகள், 350 கிராம பஞ்சாயத்துகள், 58 ஊராட்சி ஒன்றியங்கள், 5 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
5 மாவட்டங்களில் மொத்த வாக்குப்பதிவு 76.38 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக வயநாட்டில் 79.39 சதவீதமும், குறைந்த பட்சமாக கோட்டயத்தில் 73.89 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வயநாடு மாநாட்டில் ஓட்டு போட்டு விட்டு ஆஸ்பத்திரி திரும்பிய 58 வயது பெண் ஒருவர் திடீரென உயிரிழந்தார். வயநாடு சுல்தான் பத்தேரி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கருணாகரன் (வயது 45) என்ற போலீஸ் அதிகாரி கீழே விழுந்து உயிரிழந்தார்.
Related Tags :
Next Story