டெல்லி போக்குவரத்து எச்சரிக்கை: விவசாயிகள் முற்றுகையால் சாலைகள் தொடர்ந்து மூடல்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 11 Dec 2020 4:29 PM IST (Updated: 11 Dec 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர், சில்லா ஆகிய இடங்களில் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் உள்ள பல்வேறு சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர், சில்லா ஆகிய இடங்களில் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் உள்ள பல்வேறு சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இதனால், வாகன ஓட்டிகளின் நலனுக்காக டெல்லி போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து குறித்து டுவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், திக்ரி, தான்சா எல்லைகள் மூடப்பட்டு உள்ளன். அங்கு  வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும், ஜாதிகாரா எல்லை இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மட்டும் திறக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

அரியானா மாநிலத்துக்கு செல்பவர்கள் பயன்படுத்த வேண்டிய சாலைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்டை மாநிலம்  அரியானாவுக்கு பயணிப்பவர்கள் ஜரோடா, தவுரலா, கபாஷேரா, பதுசராய், ராஜோக்ரி என்.எச் 8, பிஜ்வாசன் / பஜ்கேரா, பாலம் விஹார் மற்றும் துண்டஹேரா எல்லைகள் வழியாக செல்ல வேண்டும்  என்று கூறி உள்ளனர்.


Next Story