சிங்கங்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மிரட்டிய சிறுவன்
குஜராத்தில் கிர் வன பகுதியில் உள்ள சிங்கங்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மிரட்டிய சிறுவன் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
ஜுனாகட்,
குஜராத்தில் உள்ள கிர் வன பகுதி ஆசிய சிங்கங்களின் புகலிடம் ஆக உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிங்கங்களை துன்புறுத்துவதோ அல்லது அவற்றை சீண்டுவதோ சட்டப்படி குற்றம் ஆகும். இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.25 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்படும்.
குஜராத்தின் ஜுனாகட் நகரில் கதியா கிராமத்தில் கிர் காடுகளின் கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட துளசிஷியாம் வன பகுதிக்கு உட்பட்ட இடத்தில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களது வழியில் 2 ஆசிய சிங்கங்கள் சென்றுள்ளன.
இதனை கண்டவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஹார்ன் அடித்து சப்தம் எழுப்பியும், வண்டியை ஓட்டி சென்று அவற்றை விரட்டியும் உள்ளனர். இதனை அவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து பின்பு சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.
இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்து, அந்த 2 நபரையும் வனவாழ் உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவன் சிறுவன். மற்றொருவர் பெயர் யூனிஸ் பதான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுபோன்ற குற்றங்களில் இதற்கு முன் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரங்களில் ஜாமீன் எளிதில் கிடைக்காது. அதனால் இதுபோன்ற செயல்களில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story