பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 10:31 PM IST (Updated: 12 Dec 2020 10:31 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை தெலுங்கானா முதல் மந்திரியும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு நேற்று தனி விமானத்தில் சென்றார். நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை விடுவிக்க சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்துப் பேசினார்.  

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில்  பாஜகவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் காரசாரமாக மோதிக்கொண்ட நிலையில்,  இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


Next Story