டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2020 6:35 AM GMT (Updated: 13 Dec 2020 6:35 AM GMT)

டெல்லி போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் மாநில எல்லையில் 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெய்பூர்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, சில்லா, காஜிப்பூர் என டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள், இடதுசாரிகள் மற்றும் எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஷாஜகான்பூரில் உள்ள ஜெய்சிங்பூர்-கேரா எல்லையில் (ராஜஸ்தான்-அரியானா எல்லை) திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்த 12-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.

மேலும் விரைவில் ராஜஸ்தானில் உள்ள மற்ற விவசாய சங்கத்தினர் தங்களுடன் போராட்டத்தில் இணைய உள்ளதாகவும், அதன் பிறகு டெல்லியை நோக்கி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story