பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா தொற்றுக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், பல்துறை சார்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அவர்களில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்காளத்தின் தெற்கு பர்கானாஸ் பகுதிக்கு செல்ல முயன்ற அவரது பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்காக மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story