டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 Dec 2020 10:12 PM IST (Updated: 13 Dec 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1984 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1984 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.07 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 33 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 10,014-ஆக அதிகரித்துள்ளது.


Next Story