விவசாயிகள் போராட்டம் குறித்த மந்திரிகளின் குற்றச்சாட்டு உண்மைதானா? பிரதமர் தெளிவுப்படுத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


விவசாயிகள் போராட்டம் குறித்த மந்திரிகளின் குற்றச்சாட்டு உண்மைதானா? பிரதமர் தெளிவுப்படுத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2020 9:56 PM GMT (Updated: 13 Dec 2020 9:56 PM GMT)

விவசாயிகள் போராட்டம் குறித்த மந்திரிகளின் குற்றச்சாட்டு உண்மைதானா? என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை, ட

விவசாயிகள் போராட்டம் குறித்த மந்திரிகளின் குற்றச்சாட்டு உண்மைதானா? என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மந்திரிகள் குற்றச்சாட்டு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னணியில் பாகிஸ்தான், சீனா இருப்பதாக மத்திய மந்திரி ராவ்சாகேப் தான்வே கூறினார்.

இதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரை பதவியில் நீக்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு கோரிக்கை வைத்தது.

இந்தநிலையில் மந்திய மந்திரி பியூஸ் கோயல் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மத்திய மந்திரிகளின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த மத்திய மந்திரிகளின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், “கருணை அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றி பரிசீலனை செய்யாமல், மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தான்வே, பியூஸ் கோயல் ஆகியோர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளனர்.

விசாயிகளின் போராட்டத்துக்கு பாகிஸ்தானும், சீனாவும் பின்னணியில் இருப்பதாக தான்வே கூறுகிறார். கோயல் மாவோயிஸ்டுகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதானா? என்பதை பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும்” என கூறினார்




Next Story