அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்

விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள் மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டம் நடத்தும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனது ஆணவத்தை கைவிட்டு, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை கொண்டுவர வேண்டும்.
விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள் மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் அதில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story