நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு


Representational image
x
Representational image
தினத்தந்தி 14 Dec 2020 12:01 PM IST (Updated: 14 Dec 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வுக்கு விருந்து வைத்து நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கான்பூர்

உத்தரபிரதேசம் கான்பூரில் லெப்டினன்ட் பதவியில் இருந்து கர்னல் பதவி  உயர்வு கிடைத்தை தொடர்ந்து ராணுவ அதிகாரி ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்து உள்ளார்.  விருந்தில் கலந்து கொள்ள தனது லக்னோ நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். அவர்களும் அந்த விருந்தில் லக்னோவில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கர்னலின் நண்பர் இராணுவ அதிகாரி மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில்  புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் தனது மனைவி ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர், இந்தியாவில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தன்னையும் தனது மனைவியையும்  விருந்துக்கு அழைத்து ராணுவ அதிகாரி தனது மனைவிக்கு போதை பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். 

இது குறித்து போலீசார்  இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என போலீஸ் சூப்பிரெண்டு  (கிழக்கு) ராஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரி நீரஜ் கெஹ்லோட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.


Next Story