ஏர் இந்தியா பங்குகளை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் ஆர்வம்?
ஏர் இந்தியா பங்குகளை வாங்க நிறுவனங்கள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பிக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
புதுடெல்லி,
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.80 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. ஆகவே, அதன் 100 சதவீத பங்குகளையும் விற்று, அதை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, ஏர் இந்தியா பங்குகளை வாங்க நிறுவனங்கள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பிக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க தனியார் நிறுவனங்கள் தொடக்கத்தில் ஆர்வம் காட்டமல் இருந்தன. இதனால், பங்குகளை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளில் பலவற்றை மத்திய அரசு தளர்த்தி ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குவதற்கான காலக்கெடுவையும் நீட்டித்தது.
இந்நிலையில், மத்திய அரசு நீட்டித்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஒரு சில பெரு நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் எர்லைன்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் விஸ்தரா என்ற பெயரில் விமான சேவையை இயக்கிவருகிறது. மேலும், மலேரியாவின் ஏர் ஏசியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஏர் ஏசியா இந்தியா விமான சேவையையும் இயக்கிவருகிறது.
தற்போது ஏர் ஏசியாவில் பெருமளவு பங்குகளை வைத்துள்ள டாடா நிறுவனம் ஏர் ஏசியா மூலமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
Related Tags :
Next Story