கார் விபத்தில் உயிர் தப்பிய இமாச்சல பிரதேச கவர்னர்
ஐதராபாத் அருகே கார் விபத்தில் இமாச்சல பிரதேச கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா உயிர் தப்பினார்.
ஐதராபாத்
இமாச்சல மாநில கவர்னராக இருப்பவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்த இவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து உள்ளார். பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்திலிருந்து சூர்யாபேட்டைக்கு காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நல்கொண்டா மாவட்டம், கைத்தாபுரம் எனும் இடத்தில் அவரது கார் ஒரு மரத்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் கவர்னர் தத்தாத்ரேயாவுக்கும், அவரது உதவியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இவர்கள் வேறு ஒரு காரில் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
Related Tags :
Next Story