விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 16 Dec 2020 5:57 AM IST (Updated: 16 Dec 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி, 

டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த ரிஷப் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவது சட்ட விரோதம். இதனால் கொரோனா தொற்று பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவ சேவை பெறுவதற்கும், வருபவர்களுக்கும், ஆம்புலன்ஸ் போன்றவைக்கும் இடையூறு விளைவிப்பதாக உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவரும், வக்கீல் ரீபக் கன்சலும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.


Next Story