அன்றைய பிரதமரின் திறமையால் அண்டை நாடுகள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த நேரம் - 1971 போர் வெற்றி குறித்து ராகுல் காந்தி ட்வீட்


அன்றைய பிரதமரின் திறமையால் அண்டை நாடுகள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த நேரம் - 1971 போர் வெற்றி குறித்து ராகுல் காந்தி ட்வீட்
x
தினத்தந்தி 16 Dec 2020 2:02 PM IST (Updated: 16 Dec 2020 2:02 PM IST)
t-max-icont-min-icon

அன்றைய இந்திய பிரதமரின் திறமையால் எல்லையை மீற அண்டை நாடுகள் அஞ்சிய நேரம் அது என்று 1971 போர் வெற்றி குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. 90 ஆயிரம் வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16–ந்தேதி ‘விஜய் திவஸ்’(வெற்றி தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் பொன்விழா கொண்டாட்டம் தொடக்கத்தில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில்  வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நினைவுகூர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

''அன்றைய இந்திய பிரதமரின் திறமையால் அண்டை நாடுகள் நம் நாட்டின் எல்லைகளை மீற அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அது நடந்தது. 1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்; நமது ஆயுதப்படைகளின் வீரத்திற்கு தலைவணங்குவோம்''

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த போர் நடந்தபோது இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story