கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்


கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்
x
தினத்தந்தி 16 Dec 2020 1:03 PM GMT (Updated: 2020-12-16T18:33:01+05:30)

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி இடது ஜனநாயக முன்னணி முன்னிலை வகித்து வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.  கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதன்படி 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவானது.

தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 244 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 6 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய முன்னணி நிலவரம் வருமாறு :-

கிராம பஞ்சாயத்து-941
இடது ஜனநாயக முன்னணி -515
ஐக்கிய ஜனநாயக முன்னணி -376
பா.ஜ.க-28
மற்றவர்கள்-22

பஞ்சாயத்து வார்டு-152 
இடது ஜனநாயக முன்னணி-108
ஐக்கிய ஜனநாயக முன்னணி-44

மாவட்ட பஞ்சாயத்து-14 
இடது ஜனநாயக முன்னணி-10
ஐக்கிய ஜனநாயக முன்னணி -4

நகராட்சி-86
இடது ஜனநாயக முன்னணி-35
ஐக்கிய ஜனநாயக முன்னணி-45
பா.ஜ.க -4
மற்றவர்கள் -2

மாநகராட்சி- 6 
இடது ஜனநாயக முன்னணி-3
ஐக்கிய ஜனநாயக முன்னணி -3

Next Story