அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 4 முறை நடைபெறும் மத்திய மந்திரி அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 4 முறை நடைபெறும் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2021) முதல் 4 முறை நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.
இதன்படி முதல் கட்டமாக ஜே.இ.இ. முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின்னர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பிப்ரவரி மாதம் நடைபெறும் ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடைசி தேர்வு முடிந்த அடுத்த 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story