கொரோனா முதல் கட்ட தடுப்பூசிக்கு இந்தியா ரூ.13,218 கோடி வரை செலவிட வேண்டும!!


கொரோனா முதல் கட்ட தடுப்பூசிக்கு இந்தியா ரூ.13,218  கோடி வரை செலவிட வேண்டும!!
x
தினத்தந்தி 17 Dec 2020 2:51 PM IST (Updated: 17 Dec 2020 2:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா முதல் கட்ட தடுப்பூசிக்கு இந்தியா ரூ. 13,218 கோடி வரை செலவிட வேண்டும் என தகவல் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த ஜனவரி மாத இறுதியில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. நாள்தோறும் சுமார் 1 லட்சம் நோயாளிகள் என்ற நிலையை அப்போது எட்டியது.

பின்னர் தொற்றின் வேகம் படிப்படியாக சரியத்தொடங்கியது. சமீப நாட்களாக 30 ஆயிரத்துக்கு மேல் தினசரி பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. தற்போது அதில் இருந்தும் குறைந்துள்ளது. இவ்வாறு பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிவதால் மத்திய-மாநில அரசுகளுக்கு மகிழ்ச்சியையும், மருத்துவத்துறைக்கு ஆறுதலையும் அளித்து இருக்கிறது.

இந்த வரிசையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  புதிதாக பாதிக்கப்பட்ட 24,010 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 99 லட்சத்து 56 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 355 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக உயர்ந்து விட்டது.

இந்தியாவில் 99 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்தவகையில் மொத்தம் 94 லட்சத்து 89 ஆயிரத்து 740 பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் குணமடைந்த 33 ஆயிரத்து 291 பேரும் அடங்குவர்.

அமெரிக்காவிற்கு அடுத்த  இடத்தில்  உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  கொண்ட  நாடாக இந்தியா உள்ளது.   அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 30 கோடி மக்களுக்கு  தடுப்பூசி போட இந்தியா திட்டமிட்டுள்ளது.  அஸ்ட்ராஜெனெகா, ரஷியாவின் ஸ்பூட்னிக், ஜைடஸ் காடிலா மற்றும் இந்தியாவின் சொந்த பாரத் பயோடெக் ஆகியவற்றிலிருந்து இந்த தடுப்பூசிகளைக் பெறக் கூடும்.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்  மதிப்பாய்வு செய்து உள்ளது. இந்தியா அதன் பரந்த மக்கள்தொகையை தடுப்பதற்கு எதிர்கொள்ளும் நிதி நிலைமையின்  அளவை அடிக்கோடிட்டுக் காட்டி உள்ளது. 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்  கூறி இருப்பதாவது:-

முதல்  கட்டம் முக்கியமான தொழிலாளர்கள் மற்றும் கொரோனா தொற்றால் அதிக ஆபத்தில் உள்ள 30 கோடி மக்களுக்கு  60 கோடி டோஸ்கள்  தேவைப்படும்

கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு மற்றும் கேவி (GAVI) உடன் இணைந்து, ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கண்டறியும் சோதனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்திய அரசு அதன் தடுப்பூசி திட்டத்தின் செலவு குறித்த எந்த மதிப்பீட்டையும் வழங்கவில்லை, இருப்பினும் மக்களைப் பாதுகாக்க அனைத்து வளங்களும் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அரசாங்கங்கள், மருந்து நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கூட்டணியான கேவி (GAVI)  இது ஒரு ஆதரவு தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறது.

கோவக்ஸ் திட்டத்தின்  கீழ் இந்தியாவுக்கு 19-25  கோடி டோஸ்கள்  கிடைத்தால்  பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்கம் சுமார் 1.4 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ,10282 கோடி வரை )செலவிட வேண்டும்.மறுபுறம், இந்தியா 9.5-12.5 கோடி  டோஸ் என குறைந்த ஒதுக்கீட்டைப் பெற்றிருந்தால், கூடுதல் டோஸ்களை  வாங்குவதற்கு அரசாங்கம் 1.8 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.13,218 கோடி வரை ) செலவிட வேண்டும். இதனுடன்  ஒப்பிடுகையில் இந்தியாவின் 2020/21  பட்ஜெட் சுகாதாரத்துக்காக 10 பில்லியன் டாலருக்கும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. என மதிப்பிட்டு  உள்ளது.

Next Story