ஜார்கண்ட் முதல்வர் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்


ஜார்கண்ட் முதல்வர் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்
x
தினத்தந்தி 18 Dec 2020 8:19 AM GMT (Updated: 2020-12-18T13:49:07+05:30)

ஜார்கண்ட் முதல்வர் மீது மும்பையை சேர்ந்த மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார் தொடர்பாக மராட்டிய டி.ஜி.பி.,க்கு, தேசிய பெண்கள் ஆணைய தலைவர், கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி :

ஜார்கண்ட் முதல்வராக, ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த, 2013 ஜூலை முதல், 2014 டிசம்பர் வரை, ஜார்கண்ட் முதல்வராக பதவி வகித்தார்.

அந்த சமயத்தில், ஹேமந்த் சோரன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று, தன்னையும், தன் குடும்பத்தாரையும்  மிரட்டியதாக, மும்பையை சேர்ந்த மாடல் அழகி, பத்திரிகை ஒன்றுக்கு, சமீபத்தில் பேட்டி அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மும்பை போலீசார், கடந்த, 2013ல் வழக்கு பதிவு செய்தனர். பின், இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாக கூறி, வழக்கு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,சமீபத்தில்  பாதிக்கபட்ட பெண் ஹேமந்த் சோரன் என்னை ஒரு விலங்கு போல பாலியல் பலாத்காரம் செய்தார், பாலியல் வெறி பிடித்தவர் நடந்து கொண்டார். எனக்கு  பெண் மரண அச்சுறுத்தல் உள்ளது என்று குற்றம் சாட்டினார்  மேலும்  அவரின் போலீஸ் பாதுகாப்பு கோரும் கடிதம் வைரலாகியது.

இதன்  அடிப்படையில், தேசிய பெண்கள் கமிஷன், நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விளக்கம் அளிக்குமாறு, மராட்டிய  டி.ஜி.பி.,க்கு, தேசிய பெண்கள் கமிஷன் தலைவர், கடிதம் எழுதியுள்ளார்.Next Story