திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மந்திரிசபையில் இருந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகினார். அவர் சனிக்கிழமை பா.ஜனதாவில் சேருவார் என்று தெரிகிறது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில், சுவேந்து அதிகாரிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயணம் செய்யும்போது, ஆயுதம் தாங்கிய 6 அல்லது 7 கமாண்டோக்கள் உடன் செல்வார்கள். 2 பாதுகாப்பு வாகனங்களும் செல்லும். மேற்கு வங்காளத்தை தவிர இதர இடங்களில் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்படும்.
Related Tags :
Next Story