மராட்டியத்தில் சரக்கு ரெயில் விபத்தில் சிக்கி 3 பேர் பலி


மராட்டியத்தில் சரக்கு ரெயில் விபத்தில் சிக்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2020 4:49 PM IST (Updated: 19 Dec 2020 4:49 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.

நலசோபரா,

மராட்டியத்தில் நலசோபரா ரெயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்தில் சிக்கியது.  இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் ஒருவர் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து என தெரிகிறது.  இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விரார் பகுதியை சேர்ந்த நபர்கள் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

Next Story