விபத்தில் கன்று காயம் : மருத்துவமனை வரையில் பின்னால் ஓடிய தாய் பசு - கலங்கச்செய்த பாசப்போராட்டம்


விபத்தில் கன்று காயம் : மருத்துவமனை  வரையில் பின்னால் ஓடிய தாய் பசு -  கலங்கச்செய்த பாசப்போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2020 3:00 PM IST (Updated: 20 Dec 2020 3:00 PM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் காயம் அடைந்த கன்று குட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது 3 கிலோ மீட்டர் வரை பின்னால் தாய் பசு ஓடி வந்தது பார்ப்போரை கலங்கச்செய்தது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் மல்கான்கிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டதில் கன்று ஒன்று காயம் அடைந்துள்ளது. இதனை பார்த்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் கன்றை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பரிதவித்த கன்றுவின் தாய் பசு மருத்துவமனை வரையில் சுமார் 3 கிலோ மீட்டர் வரையில் பின்னால் ஓடிச் சென்றது. பார்ப்போரை கலங்கச்செய்த பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ அன்னையின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை என சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

Next Story