கேரளாவில் மேலும் 5,711 பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 5,711 பேருக்கு கொரோனா தொற்று
x

கேரளாவில் மேலும் 5,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் இன்று மேலும் 5,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் மேலும் 5,711- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவில் இருந்து 4,471- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,41,285 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா பாதிப்பால்  இன்று மேலும் 30 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,816ஆக உயர்ந்துள்ளது. 

Next Story