அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு


அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 1:50 AM IST (Updated: 1 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

சண்டிகார்,

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த 29-ந் தேதி, டெல்லி சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பதற்றம் நிலவுவதால், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் இணைய சேவை ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில், அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது. 

இந்த மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இணைய சேவையோ, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையோ இருக்காது என்று மாநில அரசு கூறியுள்ளது. அமைதி சீர்குலைவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story