ராஜஸ்தான் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் - 1,197, பாஜக - 1,140 இடங்களில் வெற்றி


ராஜஸ்தான் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் - 1,197, பாஜக - 1,140 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 1 Feb 2021 3:50 AM IST (Updated: 1 Feb 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1,197 இடங்கலிலும், பாஜக 1,140 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் 80 நகராட்சிகள், 9 நகரசபைகள், ஒரு மாநகராட்சிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 35 வார்டுகளுக்கு 10 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 50 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அதில், காங்கிரஸ் 1,197 இடங்களிலும், பாஜக 1,140 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதுதவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி 46 இடங்களிலும், சுயேச்சைகள் 634 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், ஆர்எல்பி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற்றதாகவே வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Next Story