மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம்


மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
x
தினத்தந்தி 1 Feb 2021 7:28 AM GMT (Updated: 1 Feb 2021 8:15 AM GMT)

தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகியின் நெருங்கிய ஆதரவாளரானடின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான்  சூகி பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஆங் சான் சூகி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டில் அதிகாரம் மிக்க ராணுவம் கூறி வந்தது. இந்த சூழலில், இன்று அதிகாலை ஆங் சான் சூகி உள்பட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில்,  மியான்மரில் ஒரு ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.  தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. 

மியான்மரில் ராணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. மியான்மர் ராணுவம் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டன. இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மியான்மர் நிலவரம் பற்றி கூறியதாவது:  மியான்மரில் நடந்து வரும் நிகழ்வுகளை ஆழ்ந்த அக்கறையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம். 

மியான்மரில் ஜனநாயக ரீதியிலான மாற்றத்திற்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை எப்போதும் அளித்து வருகிறது. சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக நடைமுறைகளையும் நிலை நாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மியான்மரின் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. 

Next Story