சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் நேரடி விசாரணை தலைமை நீதிபதி உறுதி
கொரோனா பரவல் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து காணொலி மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து காணொலி மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேரடி விசாரணை தொடங்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யும் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருடன் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே நேற்று ஆலோசித்தார். அப்போது மருத்துவ ஆலோசனையின்படி சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையே நேரடி விசாரணை தொடங்க கோரி சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story