இப்படியும் ஒரு அலட்சியம்: போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசரை கொடுத்த ஊழியர்கள் 12 குழந்தைகள் பாதிப்பு


இப்படியும் ஒரு அலட்சியம்: போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசரை கொடுத்த ஊழியர்கள் 12 குழந்தைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 1:42 AM IST (Updated: 2 Feb 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

இப்படியும் ஒரு அலட்சியம்: போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசரை கொடுத்த ஊழியர்கள் 12 குழந்தைகள் பாதிப்பு

மும்பை,

மராட்டியத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசரை கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. மராட்டியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது.

இங்குள்ள யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டபோது தான் இந்த அலட்சியம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவும் சானிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படடனர். அவர்களது உடல் நிலை சீராக இருப்பாக யவத்மால் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ண பஞ்சால் தெரிவித்தார். சம்பவத்தின்போது பணியில் ஒரு டாக்டர், ஒரு அங்கன்வாடி ஊழியர், ஒரு ஆஷா ஊழியர் என 3 பேர் இருந்ததாகவும், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Next Story