சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 2 Feb 2021 5:40 PM IST (Updated: 2 Feb 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா  ஊரடங்கு  காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கியதையடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  ஊரடங்கு காலத்தில்  மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.  

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட்டுள்ளது. அதன் படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு மே 4 முதல் தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 7ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பிற்கு தேர்வு காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறுகின்றன. அதேபோல 12 ம் வகுப்பிற்கு மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அச்சமின்றி பதட்டம் இன்றி எதிர்கொள்ள வேண்டும் எனவும், பொதுத் தேர்வுகளை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Next Story