மேற்கு வங்காளத்தில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி


மேற்கு வங்காளத்தில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி
x
தினத்தந்தி 2 Feb 2021 6:13 PM IST (Updated: 2 Feb 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநிலக் பள்ளிக்கல்வித் துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநிலக் பள்ளிக்கல்வித் துறை மந்திரி  பார்த்தா சாட்டர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story