பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய உள்துறை அமைச்சகம்
பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29-ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், எல்லைகளில் நடந்த அத்துமீறல்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை எழுத்துபூர்வமாக சமர்பிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
* ஜம்மு-காஷ்மீரில் கடந்தாண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.
* பாகிஸ்தான் அத்துமீறலில் வீரர்கள் 24 பேரும் பொதுமக்கள் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.
* கடந்த ஆண்டில் 244 தீவிரவாத தாக்குதலில் 62 வீரர்கள் மற்றும் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
* பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story