உத்தரகாண்டில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை - முதல்-மந்திரி திரிவேந்திர சிங்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.
உத்திரகாண்ட்,
நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு முடங்கி போயினர். ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் துணிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பிரிவில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்திரகாண்டில் கொரோனா பிரிவில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.11,000 வழங்கப்படும். மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story