கேரள சட்ட சபை தேர்தல்: 40 பேர் கொண்ட குழுவை அமைத்து சோனியா காந்தி உத்தரவு


கேரள சட்ட சபை தேர்தல்: 40 பேர் கொண்ட குழுவை அமைத்து சோனியா காந்தி உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2021 8:17 AM IST (Updated: 3 Feb 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

கேரள சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது.

புதுடெல்லி, 

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கேரள சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, அம்மாநில சட்டசபைக்
கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக 40 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்து உள்ளார்.

இந்த தேர்தல் குழுவில் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, கேரள காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, சசிதரூர், வயலார் ரவி, கே.வி.தாமஸ், முன்னாள் மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜே.குரியன், கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

Next Story