டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுமார் 123- பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை சேகரித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜனவரி 26 அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறைகளில் வைக்கப்பட்டுள்ள 115 பேரின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.
ஜனவரி 26 -ம் தேதி கிசான் அந்தோலனில் பங்கேற்ற பின்னர் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடும் மக்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story