தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி.,கூறினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று திருச்சி சிவா எம்.பி., கூறினார்.
சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.
டெல்டா பகுதிகளில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும், தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அமைதியுடன் வாழ முடியவில்லை என்று திருச்சி சிவா கூறினார்.
Related Tags :
Next Story