பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன: குலாம் நபி ஆசாத்


பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன: குலாம் நபி ஆசாத்
x
தினத்தந்தி 3 Feb 2021 2:58 PM IST (Updated: 3 Feb 2021 3:00 PM IST)
t-max-icont-min-icon

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க அரசு சம்மதம் தெரிவித்தது. இதன்படி 15 மணி நேர விவாதம் மாநிலங்களவையில் நடக்கிறது.

 இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், “ விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமாக உள்ள மூன்று வேளாண்  சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெற முன்வரவேண்டும் என்றார். 

 மேலும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட வேளாண் தொடர்பான சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் தனது பேச்சின் போது சுட்டிக்காட்டினார். அதேபோல், கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த குலாம் நபி ஆசாத்,  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 


Next Story