புனே மாவட்டத்தில் 14-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு


புனே மாவட்டத்தில் 14-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 1:08 AM IST (Updated: 1 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

புனே மாவட்டத்தில் 14 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புனே, 

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்த ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது

இந்த உத்தரவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் புனே மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளை வருகிற 14-ந்தேதி வரை மூடும்படியும் உத்தரவில் கலெக்டர் கூறியுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story