பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்!
பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் நேற்று முன்தினம் கூடிப்பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் குலாப் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அடங்குவர். இந்தக் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், நேற்று ஜம்முவில் குஜ்ஜார் தேஷ் அறக்கட்டளை நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார்.
குலாம் நபி ஆசாத் கூறுகையில், “நான் கிராமத்தில் இருந்து வந்தவன்தான். நான் ஒரு கிராமவாசி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். நமது பிரதமர் மோடி போன்ற தலைவர்களைப் பற்றிய நிறைய விஷயங்களை நான் பாராட்டுகிறேன். எனக்கும் மோடிக்கும் இடையே அரசியலில் மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக, அதுவும் தான் டீ விற்று வந்ததைக்கூட சொல்கிறார். இது பாராட்டுக்குரியது” என்றார்.
Related Tags :
Next Story