இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் "நல்ல நண்பர்களாக" மாறுவது தான் எனது கனவு - மலாலா யூசுப்


இந்தியா-  பாகிஸ்தான் இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது கனவு  - மலாலா யூசுப்
x
தினத்தந்தி 1 March 2021 2:11 PM IST (Updated: 1 March 2021 2:11 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் "நல்ல நண்பர்களாக" மாறுவது தான் எனது கனவு என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் கூறினார்.

புதுடெல்லி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் மெய்நிகர் முறையில் நடைபெற்ற  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் (ஜே.எல்.எஃப்) பேசும் போது கூறியதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உண்மையான எதிரி 'வறுமை, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை, இரு நாடுகளும்  ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருவரும் கைகோர்த்து அதற்கு எதிராக போராட வேண்டும்.

எல்லைகள் மற்றும் பிளவுகளைக் கொண்ட பழைய தத்துவம் இனி சரிப்பட்டு வராது.  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள்.  இரு நாடுகளும் "நல்ல நண்பர்களாக" மாறுவது  தான் எனது கனவு."இந்தியாவும் பாகிஸ்தானும் உண்மையான நல்ல நண்பர்களாக மாறுவதும், நாம்ஒருவருக்கொருவர் நாடுகளுக்குச் செல்வதும் எனது கனவு.

பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு தேவை. , இந்த பிரச்சினை மதத்துடன் தொடர்புடையது அல்ல, ஆனால் "அதிகாரத்தை சுரண்டுவது" தொடர்பானது. அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில்  அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு  இணைய முடக்கம் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி கவலை அளிக்கிறது என கூறினார்.

Next Story