புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்


புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
x
தினத்தந்தி 1 March 2021 4:11 PM IST (Updated: 1 March 2021 4:11 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அடுத்த ஆரோவில்லில் அனைத்து நாட்டு மக்களும் வசிக்கும் மாத்ரி மந்திர் சர்வதேச நகரம் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கப்பட்டது.

இந்த சர்வதேச நகரின் 53-வது ஆண்டு உதய தின விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கொண்டாடப்பட்டது.  இதையொட்டி அங்குள்ள ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கில் தீ மூட்டப்பட்டது. அதன் அருகில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story